< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளருக்கு வியாபாரிகள் எதிர்ப்பு..!
|16 Feb 2023 8:55 AM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்கு சேகரிக்க வந்தபோது வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த கொரோனா காலத்தில் காய்கறி சந்தையை ஆர்.கே.வி.சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்போது எம்.எல்.ஏ.வாக இருந்த தென்னரசுவிடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், தென்னரசு தங்களது கோரிக்கைகளை அவர் நிறைவேற்றவில்லை என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் காரணமாக பிரசாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் தென்னரசுவிற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேட்பாளர் அவ்விடத்தை விட்டு திரும்பிச்சென்றார்.