< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற நாளை கடைசிநாள்
|9 Feb 2023 7:45 AM IST
இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து அங்கு வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழா் கட்சி சார்பில் மேனகா உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இடைத்தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் ஈரோட்டில் உள்ள தொகுதியில் பிரசாரத்தை தொடங்கி உள்ளது.
இடைத்தேர்தலில் வேட்பு மனு பரிசீலனை நிறைவு பெற்றுள்ள நிலையில், 121 வேட்புமனுக்கள் பரீசிலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும் 83 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.