< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - நான்கு நாட்களில் 40 பேர் வேட்பு மனு
|4 Feb 2023 9:11 AM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை கடந்த நான்கு நாட்களில், 40 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், நான்காம் நாள், வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவு பெற்றது. காலை 11 மணிக்கு துவங்கிய வேட்புமனு தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன், அமமுக வேட்பாளர் சிவபிரசாத் உள்ளிட்ட 19 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இதுவரை கடந்த நான்கு நாட்களில், 40 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.