< Back
மாநில செய்திகள்
ஈரோடு மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்; கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவு
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்; கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவு

தினத்தந்தி
|
17 July 2022 2:53 AM IST

ஈரோடு மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து, கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து, கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.

இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பி.சிவக்குமார், நீலகிரி மாவட்டம் மஞ்சூர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக பங்களாபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக ஈரோட்டில் பதவி உயர்வுபெற்ற சி.வடிவேல்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். கொடுமுடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கே.முருகன், ஈரோடு டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்டம் குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓ.ஆனந்த் கொடுமுடி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு புஞ்சை புளிம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்டம் மூலனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.செல்வன் தாளவாடி இன்ஸ்பெக்டராகவும், கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.சண்முகவேல், கோபி போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். மதுரை மாநகர போலீஸ் காத்திருப்போர் பட்டியலில் இருந்த எம்.துரைபாண்டி, கடத்தூர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

டி.ஐ.ஜி. உத்தரவு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.சண்முகம், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.ஜெயமுருகன் அறச்சலூர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், அறச்சலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.சண்முகசுந்தரம், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.கிருஷ்ணமூர்த்தி, பவானி இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். கோவை சரகத்தில் காத்திருப்போர் பட்டியிலில் இருந்த எஸ்.ராஜபிரபு, கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் வி.நிர்மலா, பெருந்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வி.நிர்மலாதேவி, ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், ஈரோடு சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.விஜயா, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், ஈரோடு மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆர்.கோமதி, சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். ஈரோடு நகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் ஆர்.கவிதா லட்சுமி, கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி வெளியிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்