ஈரோடு இடைத்தேர்தல்- சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நாளை ஆலோசனை
|சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் காணோலி காட்சி வாயிலாக நாளை நடைபெறுகிறது.
சென்னை,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அதன் தலைவரும், நடிகருமான சரத்குமார் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
நாளை சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் காணோலி காட்சி வாயிலாக நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட செயலர்கள் மற்றும் தேர்தல் நடக்கக்கூடிய ஈரோட்டை சேர்ந்த மாவட்ட செயலாளர்களும் பங்கேற்க இருக்கிறார்கள்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து சரத்குமார் கேட்டறிகிறார். குறிப்பாக தேர்தல் நடைபெறும் ஈரோடு மாவட்ட செயலாளர்கள் எந்த விஷயங்களை குறிப்பிடுகிறார்கள் என்பதை ஆலோசித்து, அதன் பின்னர் முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சரத்குமார் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.