< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஈரோடு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் செந்தில்பாலாஜி வாக்குசேகரிப்பு
|5 Feb 2023 10:58 AM IST
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு, கிருஷ்ணம்பாளையம் பகுதியில் அமைச்சர் செந்தில்பாலாஜி வாக்குசேகரித்து வருகிறார். இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.