ஈரோடு இடைத்தேர்தல்: அ.தி.மு.க.டெபாசிட் தக்கவைக்குமா...! டெபாட்சிட் பெற எவ்வளவு வாக்குகள் பெற வேண்டும்...?
|77 பேர் போட்டியிட்டுள்ள நிலையில், இதுவரை வெளியான முடிவுகளின்படி 12 வேட்பாளர்கள் ஒரு வாக்குக்கூட பெறாத நிலையில், சுமார் 75 பேர் டெபாசிட் தொகையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வாக்குகளை எண்னும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது வரை 7சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
முதல் சுற்றில் நோட்டாவுக்கு 23 வாக்குகள் கிடைத்துள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை திரும்பப் பெறுவதற்கு சுமார் 28 ஆயிரம் வாக்குகள் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
77 பேர் போட்டியிட்டுள்ள நிலையில், இதுவரை வெளியான முடிவுகளின்படி 12 வேட்பாளர்கள் ஒரு வாக்குக்கூட பெறாத நிலையில், சுமார் 75 பேர் டெபாசிட் தொகையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் அ.தி.மு.க டெபாசிட் இழக்குமா என் கேள்வி எழுந்தது. ஆனால் 7 வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அ.தி.மு.க 19.936 வாக்குகள் பெற்று உள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை முடிவில் அ.தி.மு.க.வுக்கு 40 ஆயிரம் வாக்குகள் வரை கிடைக்க கூடிய வாய்ப்புகள் உள்ளன. இதனால் அ.தி.மு.க டெபாசிட் இழக்காது என்பதையே காட்டுகிறது.