ஈரோடு இடைத்தேர்தல்: பணப்பட்டுவாடா புகார்- டி.ஜி.பி விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
|ஈரோடு இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடப்பதாக அளிக்கப்பட்ட புகாரில் டி.ஜி.பி. விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட பலரும் ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
இதற்கிடையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி போது செயல் வீரர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என்.நேருவும், வேட்பாளர் ஈ.வி. சாகு -கே.எஸ். இளங்கோவனும் அருகருகே இருந்துபேசிக் கொண்ட வீடியோ வெளியாகி பெரும்" பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சார்பில் துணைத் தலைவர்கள், வழக்கறிஞர்பால் கனகராஜ், கே.பி.ராமலிங்கம், நாரா யணன் திருப்பதி உள்ளிட்டநிர்வாகிகள் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் புகார் அளித்தனர். அமைச்சரின் பேச்சு அடங்கிய ஆடியோ. வீடியோ . ஆதாரங்களையும் வழங்கினர். முறையான தேர்தல்நடை பெற வருவாய், காவல்துறை அதிகாரிகளை மாற்றம் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமா ரும் புகார் கொடுத்தார். தேர்தலை முறையாக நடந்துவதற்கு தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று புகாரில் கூறி இருந்தார்.
இந்த நிலையில், இந்த புகார் மீது தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இப்போது நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளார். ஈரோடு கிழக்கில் திமுக பணப்பட்டுவாடா செய்ய போவதாக பாஜக அளித்த புகாரில் எடுத்த நடவடிக்கை என்ன? என டி.ஜி.பி சைலேந்திரபாபு மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நடந்த சம்பவத்தை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு சத்யபிரதா சாகு உத்தரவிட்ட உள்ளார்.
இந்த அறிக்கை கிடைக்கப் பெற்றதும் இந்திய தேர்தல் கமிஷனுக்கு அதை தமிழக தேர்தல் அதிகாரி அனுப்பி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.