< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை: ரெயில் நிலைய பெயர் பலகையில் இந்தி அழிப்பு - போலீஸ் விசாரணை
|31 March 2023 3:08 PM IST
பெயர் பலகையில் இருந்த இந்தி வார்த்தையை, அடையாளம் தெரியாத நபர்கள் கருப்பு மையால் அழித்துள்ளனர்.
சென்னை,
சென்னை கோட்டை புறநகர் ரெயில் நிலையத்தின் பெயர் பலகையில் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த பெயர் பலகையில் இருந்த இந்தி வார்த்தையை, அடையாளம் தெரியாத நபர்கள் கருப்பு மையால் அழித்துள்ளனர்.
இதையடுத்து ரெயில்வே துறைக்கு சொந்தமான பெயர் பலகையை சேதப்படுத்துதல் என்ற பிரிவின்கீழ் கடற்கரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பறக்கும் ரயில் செல்லும் சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தின் ஐந்தாவது நடைமேடையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.