< Back
மாநில செய்திகள்
கல்வராயன் மலைப்பகுதியில் 17 பேரல்களில் இருந்த கள்ள சாராயம் அழிப்பு - போலீசார் நடவடிக்கை
மாநில செய்திகள்

கல்வராயன் மலைப்பகுதியில் 17 பேரல்களில் இருந்த கள்ள சாராயம் அழிப்பு - போலீசார் நடவடிக்கை

தினத்தந்தி
|
18 Sept 2022 9:41 PM IST

கல்வராயன் மலைப்பகுதியில் 17 பேரல்களில் இருந்த கள்ள சாராயத்தை போலீசார் அழித்தனர்.

தண்டராம்பட்டு,

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை கிராமிய டிஎஸ்பி அஸ்வினி மேற்பார்வையில் தண்டாம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் கள்ளச்சார வேட்டை நடத்தினர் அப்போது 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 17 பேரல்களில் கள்ள சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை கைப்பற்றி அழித்தனர்.

இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சமாகும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதோடு தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்

மேலும் செய்திகள்