< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூரில் 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு
மாநில செய்திகள்

திருப்பத்தூரில் 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

தினத்தந்தி
|
4 July 2022 3:25 AM IST

வாணியம்பாடி அருகே 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லைகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆங்காங்கே பள்ளங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 5 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள், அடுப்புகள் உள்ளிட்டவற்றை போலீசார் கண்டறிந்தனர். பின்னர் அவற்றை மொத்தமாக போலீசார் அழித்தனர். மேலும், அதனை பதுக்கி வைத்தவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்