< Back
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் அனைவருக்குமான சமத்துவ ஆட்சி நடைபெறுகிறது: அமைச்சர் சேகர்பாபு
மாநில செய்திகள்

"தமிழ்நாட்டில் அனைவருக்குமான சமத்துவ ஆட்சி நடைபெறுகிறது": அமைச்சர் சேகர்பாபு

தினத்தந்தி
|
14 Sept 2023 10:17 AM IST

சனாதானத்தில் உள்ள சில கொள்கைகளை எதிர்ப்பதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சேலம்,

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

தமிழ்நாட்டில் அனைவருக்குமான சமத்துவ ஆட்சி நடைபெறுகிறது. எந்த இடத்தில் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் இறை நம்பிக்கைக்கு எதிராக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இறை நம்பிக்கை உள்ளவர்களையும் ஆதரிப்போம். இறை நம்பிக்கை இல்லாதவர்களையும் ஏற்போம்.

ஒட்டுமொத்த சனாதானத்தையும் எதிர்க்கவில்லை. அதில் உள்ள சில கொள்கைகளை தான் எதிர்க்கிறோம். என் மண் என் மக்கள் பயணம் தோல்வி அடைந்ததால் அண்ணாமலை குழம்பி போயுள்ளார். கோட்டை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு வருகிற அக்டோபர் 27-ந்தேதி நடைபெறும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

மேலும் செய்திகள்