< Back
மாநில செய்திகள்
சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
15 Jan 2023 12:15 AM IST

சின்னசேலம், மூங்கில்துறைப்பட்டு பகுதியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது

சின்னசேலம்

அம்மையகரம் கிராமம்

சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அம்மையகரம் கிராமத்தில் உள்ள பெரியார் சமத்துவபுரத்தில் சுகாதார மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சிவஞானம் வரவேற்றார்.

விழாவில் கலெக்டர் அவரது மனைவியுடன் கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் வைத்தார். பின்னர் கரும்பு, மஞ்சள், கொத்து பழவகைகளுடன் பொங்கல் படையிலிட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

விளையாட்டு போட்டி

விழாவையொட்டி மகளிர் குழு பெண்கள் மற்றும் மாணவிகளுக்கிடையே விடுகதை, கதை, கிராமிய பாட்டு மற்றும் கோலம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் ஊரக வளர்ச்சி திட்ட உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) ரத்தினமாலா, மகளிர் திட்ட அலுவலர் சுந்தர்ராஜன், தாசில்தார் இந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகநாதன், சிவகாமி, உதவி பொறியாளர் ராஜசேகர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஒன்றிய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கிராம நிர்வாக அலுவலர்கள்

அதேபோல் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடபொன்பரப்பி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை மையமாக கொண்டு 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒன்று சேர்ந்து வடபொன்பரப்பி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். இதில் வருவாய் ஆய்வாளர் நிரைமதி கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒரே வண்ணத்தில் வேட்டி-சட்டையும், பெண்கள் சேலையும்அணிந்து கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்