< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
சமத்துவ பொங்கல் விழா
|18 Jan 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதையொட்டி போலீஸ் நிலையம் முன்பு வண்ண கோலம் வரையப்பட்டது. பின்னர் அடுப்பு கூட்டி மண்பானையில் பச்சரிசி, வெல்லம் போட்டு பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து கரும்பு, மஞ்சள் கொத்துடன் வெற்றிலை, பாக்கு, பழங்களுடன், பொங்கல் படையலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீஸ்காரர்கள் கலந்து கொண்டனர்.