நாகப்பட்டினம்
சமத்துவ பொங்கல் விழா
|பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் சுகாதார மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இந்திரா வீராச்சாமி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் பொதுமக்கள் மாணவ,மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேச்சு மற்றும் கோலப்போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. .இதேபோல தென்னடார் ஊராட்சியில் சமத்துவ மற்றும் சுகாதார பொங்கல் ஊராட்சி மன்ற தலைவர் தேவி செந்தில் தலைமையில் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணகி, கிராம நிர்வாக அலுவலர் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மகளிர் குழுவினர், பொதுமக்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கோலப்போட்டி, பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.