தூத்துக்குடி
சமத்துவ பொங்கல் விழா
|தூத்துக்குடியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கட்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார். மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் கலந்து கொண்டு ஏழைப் பெண்ணுக்கு நலத்திட்ட உதவியாக இலவச தையல் எந்திரம் வழங்கினார். தூத்துக்குடி தொழிலதிபர் தர்மராஜ் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கினார்.
விழாவில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், மில்லை தேவராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், மாவட்ட பிரதிநிதிகள் பெரியசாமி, பழனிவேல், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் சகாயராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் சரவணன், மாநகர செயலாளர் உதயசூரியன், மாவட்ட தொழிலாளர் அணி துணைச் செயலாளர் முருகன், மாநகர பொருளாளர் சந்தனராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.