< Back
மாநில செய்திகள்
தத்தனூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

தத்தனூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

தினத்தந்தி
|
14 Jan 2023 12:23 AM IST

தத்தனூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் ஐஸ்வர்யா தேவி மைனர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம், மாவட்ட கவுன்சிலர் நல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட திட்ட அலுவலர் ஈஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கலிட்டு படைக்கப்பட்டது. பின்னர் கோலம், பேச்சு, பாட்டு, கும்மி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் துணைத்தலைவர் ராஜா, சமத்துவபுரம் செயலாளர் கொளஞ்சியப்பா, அலுவலக அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள், சமத்துவபுரம் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்