< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்
|22 Oct 2023 1:45 AM IST
கோத்தகிரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது.
கோத்தகிரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் நடைபெற்றது. இதனை மாநில ஆக்கி வீரரும், டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் இந்திய அணி வீரர்களுடன், காணொளி பகுத்தாய்வாளராக (வீடியோ அனலிஸ்ட்) பணியாற்றி வெண்கல பதக்கம் பெற்றவருமான அசோக் குமார் தொடங்கி வைத்தார். மாரத்தான் போட்டியானது சக்திமலையில் தொடங்கி ராம்சந்த், காமராஜர் சதுக்கம், மார்க்கெட், பஸ் நிலையம், காம்பாய் கடை, மிஷின் காம்பவுண்ட் வழியாக சென்று மீண்டும் சக்திமலையை சென்றடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.