< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
|13 Jun 2023 12:15 AM IST
பாவூர்சத்திரம் அருகே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே கல்லூரணியில் பரிசுத்த மத்தேயு ஆலய வளாகத்தில் இருந்து இயற்கையை பாதுகாக்க வேண்டி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி தலைமை சேகரகுரு வாட்சன் வரதராஜ் தலைமையில் நடைபெற்றது. சபை ஊழியர் செல்வகுமார் பொன்ராஜ் மற்றும் சபை பெரியோர்கள், பெண்கள், சிறுவர்கள் கலந்துகொண்டனர். இந்த பேரணி பரிசுத்த மத்தேயு ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கி கல்லூரணி மற்றும் சின்னத்தம்பிநாடார்பட்டியையும் சுற்றி வந்து ஆலயம் வந்தடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சபை பொருளாளர் சுந்தர் செய்திருந்தார்.