< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
|9 Oct 2023 12:30 AM IST
அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கரன்கோவில்:
கரிவலம்வந்தநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மலைவேல் தொண்டு நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் குமரேசன் தலைமை தாங்கினார். மலைவேல் பவுண்டேஷன் நிறுவன தலைவர் கணபதி முன்னிலை வகித்தார். ஆசிரியர் முருகன் வரவேற்றார். சமூக ஆர்வலர் சண்முகவேல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற 92 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள்,பவுண்டேஷன் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பவுண்டேஷன் நிறுவன தலைவர் மனோஜ் நன்றி கூறினார்.