< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
உலக சுற்றுச்சூழல் தின விழா
|8 Jun 2023 12:30 AM IST
உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
வேதாரண்யம் நகராட்சி பகுதியில் மக்கள் தூய்மை இயக்கம் ஓராண்டு நிறைவு விழா மற்றும் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நகரசபை தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் ஹேமலதா முன்னிலை வகித்தார். விழாவில் நகரசபை துணைத் தலைவர் மங்களநாயகி, நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி தூய்மை பணி ேமற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து நந்தவன குள தெருவில் பொதுமக்களின் பங்களிப்புடன் குளத்தினை சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதேபோல் அகஸ்தியர் கோவில் குளத்தை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. மேலும் நகராட்சி உரக் கிடங்கில் பணிபுரியும் 8 பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.