< Back
மாநில செய்திகள்
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தொழில் முனைவோர் கருத்தரங்கு; அரியலூரில் 13-ந்தேதி நடக்கிறது
அரியலூர்
மாநில செய்திகள்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தொழில் முனைவோர் கருத்தரங்கு; அரியலூரில் 13-ந்தேதி நடக்கிறது

தினத்தந்தி
|
2 Sept 2023 12:23 AM IST

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தொழில் முனைவோர் கருத்தரங்கு. அரியலூரில் 13-ந்தேதி நடக்கிறது.

அரியலூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சுய தொழில், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு நாள் வருகிற 13-ந்தேதி மாலை 3.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் அரசு துறைகளை சேர்ந்த மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு, அத்துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் தொழில் குறித்த விவரங்கள், நிதி ஆதாரங்கள் மற்றும் சுயதொழில் தொடங்க ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதால், இத்தொழில் முனைவோர் கருத்தரங்கில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம், என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்