விருதுநகர்
மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை
|காரியாபட்டியில் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகையினை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.
காரியாபட்டி,
காரியாபட்டியில் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகையினை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.
தொடக்க விழா
காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மகளிர் உரிமை தொகைக்கான உத்தரவு மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை வழங்கினர்.
அப்போது அமைச்சர் தங்கம் ெதன்னரசு பேசியதாவது:-
அண்ணா பிறந்த நாள் விழா, கலைஞர் நூற்றாண்டு விழா ஆகிய இரண்டும் இணைந்து இருக்கும் இந்த கால கட்டத்தில் உங்களுக்கு இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறோம். தேர்தல் அறிக்கையில் கூறிய படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு இது ஒரு அங்கீகாரம் ஆகும்.
மனு கொடுக்க மையம்
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களுக்கு தாலுகா அலுவலகத்தில் இதற்கென்று தனியாக ஒரு மையம் வைத்துள்ளோம். அங்கு மனு கொடுப்பவர்கள் மனுவை விசாரித்து தகுதி இருந்தால் கண்டிப்பாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கலெக்டர் ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், செல்லம், பேரூராட்சி தலைவர்கள் செந்தில், துளசிதாஸ், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ் (என்ற) ஜெயச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் தங்க தமிழ்வாணன், கமலிபாரதி, திருச்சுழி ஒன்றிய செயலாளர் சந்தன பாண்டியன், யூனியன் தலைவர்கள் பொன்னுதம்பி, முத்துமாரி, காளீஸ்வரி சமயவேலு, யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவசக்தி, சந்திரன், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் வாலை முத்துசாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் தங்கபாண்டியன், ஒன்றிய துணைச் செயலாளர் கீழ உப்பிலிக்குண்டு குருசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சிதம்பர பாரதி, சேகர், மகாலட்சுமி முத்துக்குமார், கல்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.