< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
சாதனை படைத்த விழுப்புரம் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
|2 Jun 2022 1:03 AM IST
சர்வதேச கராத்தே போட்டியில் சாதனை படைத்த விழுப்புரம் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழுப்புரம்,
மலேசியாவில் நடந்த சர்வதேச அளவிலான 18-வது கராத்தே போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட விழுப்புரம் தனியார் பள்ளி மாணவர்களான பிரனவ்குமரன், சபரிஷ் ஆகியோர் தலா 2 தங்க பதக்கமும், பிரவீன்குமார் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.
அதைத்தொடர்ந்து மலேசியாவில் இருந்து சொந்த ஊரான விழுப்புரத்துக்கு வந்த மாணவர்கள் 3 பேருக்கு அவர்களது பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.