< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
|14 Jun 2023 12:15 AM IST
இடைகால் பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆலங்குளம்:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்த பின்னர் மாணவர்கள் தங்களது பள்ளிகளுக்கு வந்தனர். இடைகால் ஸ்டாஅக் ஹைடெக் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது. இந்த விழாவிற்கு பள்ளியின் தலைவர் முருகன், தாளாளர் புனிதா செல்வி ஆகியோர் தலைமை தாங்கினர். முதல்வர் பிரவீன் முன்னிலை வகித்தார். முதல் நாளில் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மலர் கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.