திண்டுக்கல்
முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு உற்சாக வரவேற்பு
|நத்தத்தில் முன்னாள் அமைச்சர் விசுவநாதனுக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக, முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டார். இதனையடுத்து தனது தொகுதியான திண்டுக்கல் மாவட்டம் நத்தத்துக்கு வந்த அவருக்கு, அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நத்தம் பஸ் நிலையம் முன்பு பட்டாசுகள் வெடித்து, பொய்க்கால் குதிரை, மயில், ஆட்டங்களுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மீனாட்சிபுரம் பகுதியில், கட்சி கொடியை ஏற்றிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஊர்வலமாக பஸ் நிலைய ரவுண்டானா வரை அழைத்து வரப்பட்டார். பின்னர் அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் நத்தம் விசுவநாதன் பேசினார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை இணை செயலாளரும், நத்தம் ஒன்றியக்குழு தலைவருமான கண்ணன், நகர செயலாளர் சிவலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சின்னு, தொழிலதிபர் அமர்நாத் விசுவநாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், நகர பேரவை செயலாளர் சேக்தாவூது, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன், பேரவை ஒன்றிய செயலாளர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் வேலம்பட்டி கண்ணன், ஆண்டிச்சாமி, ஜெயப்பிரகாஷ், மாவட்ட கவுன்சிலர்கள் சின்னாக்கவுண்டர், பார்வதி, ஒன்றிய கவுன்சிலர் சத்தியமூர்த்தி, அவைத்தலைவர்கள் பிறவிக்கவுண்டர், சேக்ஒலி, நகர பொருளாளர் சீனிவாசன், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் கண்ணன், சிவா, உமாமகேஸ்வரி ராஜாராம், சுமதிசெந்தில், ராதிகாசேகர், பழனிக்குமார், நிர்வாகிகள் மோகன் பாபு, குப்பான், மனோகரன், பூமி, அம்சவள்ளி மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.