அந்தமானில் ஜி20 நாடுகளின் தூதர்களுக்கு உற்சாக வரவேற்பு
|ஜி20 நாடுகளின் தூதர்களுக்கு அந்தமானில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
போர்ட் பிளேர்,
ஜி20 கூட்டமைப்பில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியம் ஆகியவை 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
ஆண்டுதோறும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டுக்கு தலைமை பொறுப்பு என்பது ஒவ்வொரு நாடுகளுக்கும் சுழற்சி அடிப்படையில் வழங்கப்படும். இந்த ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தோனேசியா தலைமையேற்று நடத்தியது.
இதைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்க உள்ளது. இதையடுத்து வரும் டிசம்பர் 1-ந்தேதி ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்க உள்ளது. இதனை முன்னிட்டு ஜி20 சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் அந்தமான் தீவில் இது தொடர்பான கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. ஜி20 நாடுகளின் தூதர்கள் அந்தமானுக்கு வருகை தந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பாரம்பரிய வழக்கப்படி சங்கு ஊதி தூதர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.