< Back
மாநில செய்திகள்
வீடு புகுந்து  ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரிடம்  கத்திமுனையில் பணம் பறிப்பு: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
ஈரோடு
மாநில செய்திகள்

வீடு புகுந்து ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

தினத்தந்தி
|
13 Oct 2023 1:54 AM GMT

அம்மாபேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து தூங்கி கொண்டிருந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரை எழுப்பி, கத்தி முனையில் அவரிடம் இருந்த பணத்தை முகமூடி கொள்ளையர்கள் பறித்து சென்று உள்ளனர்.

அம்மாபேட்டை

அம்மாபேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து தூங்கி கொண்டிருந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரை எழுப்பி, கத்தி முனையில் அவரிடம் இருந்த பணத்தை முகமூடி கொள்ளையர்கள் பறித்து சென்று உள்ளனர்.

ஓய்வு பெற்ற டிரைவர்

அம்மாபேட்டை மாருதி நகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 65). அரசு பஸ்சில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். இவர் வீட்டில் தனியாக இருந்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லட்சுமணன் சாப்பிட்டு விட்டு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் வேட்டி அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் முகமூடி அணிந்து கொண்டு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கு தூங்கி கொண்டிருந்த லட்சுமணனை எழுப்பி கத்தியை காட்டி பணம் இருக்கிறதா என மிரட்டினர். இதில் பயந்து போன அவர் தன்னிடம் இருந்த ரூ.30 ஆயிரத்தை முகமூடி கொள்ளையர்களிடம் கொடுத்தார். உடனே அந்த பணத்தை பறித்துக்கொண்ட முகமூடி கொள்ளையர்கள், அங்கிருந்து தப்பினர்.

தி.மு.க. பிரமுகர் அலுவலகம்

இதேபோல் அந்த பகுதியில் உள்ள தி.மு.க. வக்கீல் பிரிவு துணை அமைப்பாளரான வி.எஸ்.சரவணபவா என்பவரின் அலுவலகத்திலும் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து பீரோவை உடைத்து உள்ளனர். பீரோவில் ஒன்றும் இல்லாததால் ஆத்திரத்தில் கண்காணிப்பு கேமராவை உடைத்து உள்ளனர்.

மேலும் அருகில் உள்ள குபேரன் நகரில் உள்ள அரசு பள்ளி ஆசிரியரான அசோக் என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மொபட்டையும் முகமூடி கொள்ளையர்கள் திருடி சென்று உள்ளனர்.

கொள்ளை

இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தி.மு.க. பிரமுகரின் அலுவலகத்தின் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அலுவலகத்துக்குள் கொள்ளையர்கள் வேட்டி அணிந்து வெற்று உடம்புடன் முகமூடி அணிந்து வருவதும், இடுப்பில் கத்தி போன்ற ஆயுதம் சொருகி வைத்திருப்பதும் பதிவாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து முகமூடி கொள்ளையர்கள் யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்மாபேட்டையில் வீடு புகுந்து ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரிடம் முகமூடி கொள்ளையர்கள் பணம் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்