< Back
மாநில செய்திகள்
கரும்பு தோட்டத்தில் புகுந்துகாட்டு யானைகள் அட்டகாசம்
ஈரோடு
மாநில செய்திகள்

கரும்பு தோட்டத்தில் புகுந்துகாட்டு யானைகள் அட்டகாசம்

தினத்தந்தி
|
30 Aug 2023 10:07 PM GMT

கரும்பு தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன

தாளவாடி வனச்சரகரத்துக்குட்பட்ட நெய்தாளபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 45). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து 5 யானைகள் வெளியேறின. பின்னர் அவை அருகே உள்ள மகேந்திரன் என்பவரது கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தன. அதன்பின்னர் அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்புகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின.

சத்தம்கேட்டு வீட்டில் இருந்த விவசாயி மகேந்திரன் அங்கு சென்று பார்த்தார். பின்னர் இதுகுறித்து பக்கத்து தோட்டத்து விவசாயிகளுக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் அங்கு ஒன்று திரண்டனர். பின்னர் சத்தம் போட்டும், பட்டாசு வெடித்தும் யானைகளை துரத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானைகள் காட்டுக்குள் சென்றன. யானைகள் புகுந்ததில் 3 ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் நாசமானதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்