< Back
மாநில செய்திகள்
காச நோய் மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

காச நோய் மருந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
15 April 2024 6:18 AM IST

காச நோய் மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை மத்திய, மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்

சென்னை,

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

நாடு முழுவதும் உள்ள 27 லட்சம் காச நோயாளிகளின் உயிா்க் காக்கும் மருந்தான ஏ.டி.டி-ஐ சில காரணங்களால் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க இயலாது என்று மத்திய காச நோய் ஒழிப்பு திட்ட இயக்குநா் கூறியிருப்பது பெரும் அதிா்ச்சியை அளிக்கிறது. காச நோய்க்கான மருந்தை ஏற்பாடு செய்யாமல் லட்சக்கணக்கான நோயாளிகளின் உயிரோடு மத்திய அரசு விளையாடுவது மிகவும் கண்டனத்துக்குரியதாகும்.

2025-ஆம் ஆண்டுக்குள் காச நோயை இந்தியாவிலிருந்து அடியோடு ஒழிப்போம் என்று பிரதமா் மோடி கூறி வரும் நிலையில், காச நோய்க்கான மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது நோய் பரவும் அபாயத்தையே ஏற்படுத்தும். காச நோய் மருந்துகளின் கொள்முதலுக்காக தமிழ்நாடு அரசும் போதிய நிதியை சுகாதாரத் துறைக்கு ஒதுக்கவில்லை. இதனால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தங்களது சொந்த செலவில் காச நோய் மருந்துகளை வாங்கும் அவலநிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

எனவே, உயிருக்கு போராடி வரும் காச நோயாளிகளிளைக் கருத்தில் கொண்டு போா்க்கால அடிப்படையில் காச நோய் மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை மத்திய, மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.என்று அவா் தெரிவித்துள்ளாா்.

மேலும் செய்திகள்