< Back
மாநில செய்திகள்
1,677 தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

1,677 தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு

தினத்தந்தி
|
25 Jun 2022 7:30 PM GMT

பள்ளி கல்வித்துறை சார்பில் 1,677 தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 4, 5-ம் வகுப்புகளை கையாளும் 1,677 தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு மாவட்டத்தில் 15 இடங்களில் நடைபெற்றது. பயிற்சியில் ஆசிரியர்களுக்கு பாடப்பகுதியில் உள்ளவற்றை ஆங்கிலத்தில் பேச்சு வழக்கில் கொண்டு வருவது குறித்தும், அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஆங்கில சொற்களை வினா வடிவிலும், பதில் வடிவிலும் பேசுதல், திறனில் பயன்படுத்துவது குறித்தும், ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே நடைபெறும் கற்றல், கற்பித்தல் உரையாடல்கள், கட்டளைகள் போன்றவற்றை பேச்சு வழக்கில் பயன்படுத்தவும், மாணவர்கள் பள்ளிக்கு உள்ளேயும், பள்ளிக்கு வெளியேயும் ஆங்கில மொழியை தங்கு தடையின்றி பேசுவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் இப்பயிற்சியில் காணொலி வாயிலாக வீடியோக்கள் ஆங்கிலத்தில் பேசுவது குறித்து ஒளிபரப்பப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

பயிற்சியின் முடிவில் ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சியை மாணவர்களிடம் கொண்டு செல்வது குறித்து மாதிரி வகுப்புகள் எடுத்தும் சக ஆசிரியர்களோடு ஆங்கிலத்தில் கலந்துரையாடவும் செய்தனர். இதில் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற பயிற்சி வகுப்பு மையங்களை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவி திட்ட அலுவலர் தங்கமணி பார்வையிட்டார். இதேபோல் 6 முதல் 9 வரை ஆங்கில பாடம் எடுக்கும் 646 ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பொன்னமராவதி

பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் திருமுருகன் பயிற்சியினை தொடங்கி வைத்தார். ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நவநீத கிருஷ்ணன், வட்டார கல்வி அலுவலர்கள் பொன்னழகு, ராமதிலகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) நல்லநாகு பயிற்சியின் நோக்கத்தை விளக்கி கூறினார். இப்பயிற்சியில் 44 ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மணமேல்குடி

மணமேல்குடி ஒன்றியத்தில் 4 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. பயிற்சிக்கு மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பயிற்சிக்கான முன்னேற்பாடுகளை வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் சிவயோகம் செய்திருந்தார். இப்பயிற்சியில் ஆங்கிலத்தில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இப்பயிற்சியில் காணொலி வாயிலாக வீடியோக்கள் ஆங்கிலத்தில் பேசுவது குறித்து ஒளிபரப்பப்பட்டது.

மேலும் செய்திகள்