புதுக்கோட்டை
டெங்கு காய்ச்சலுக்கு என்ஜினீயரிங் மாணவர் பலி
|அறந்தாங்கி அருகே டெங்கு காய்ச்சலுக்கு என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.
ெடங்கு காய்ச்சல்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வேலாயுதம் பிள்ளை நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் ஹரிராஜ் (வயது 20). இவர், கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அங்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.
இதனால் ஹரிராஜ் கடந்த 8-ந்தேதி அறந்தாங்கியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். பின்னர் அவரை அவரது பெற்றோர் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கூறி மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர் பலி
பின்னர் அங்கிருந்து மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 11-ந் தேதி அனுமதித்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹரிராஜ் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார்.