< Back
மாநில செய்திகள்
என்ஜினீயரிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

என்ஜினீயரிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை

தினத்தந்தி
|
26 May 2022 8:43 PM IST

கல்லிடைக்குறிச்சி அருகே என்ஜினீயரிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அம்பை:

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் இந்திராணி (வயது 20). இவர் நெல்லையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இந்திராணி கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அவர் வீட்டின் அருகே வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவர் தலைக்கு அடிக்க பயன்படுத்தும் 'ஹேர் டை'யை (விஷம்) குடித்து இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்ேகாட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இந்திராணி உயிரிழந்தார்.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரித்தனர். விசாரணையில், கல்லூரியில் தொழில்நுட்ப சுற்றுலா செல்வதற்காக இந்திராணி பெற்றோரிடம் பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த இந்திராணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து உள்ளது. அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகிறார்கள். விபரீத முடிவாக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்