< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பொறியியல் தரவரிசை பட்டியல் - முதல் 5 இடம்பிடித்த அரசுப் பள்ளி மாணவர்கள்
|17 Aug 2022 3:30 PM IST
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான அரசுப் பள்ளி மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை,
பொறியியல் படிப்பில் சேர்வதற்கான அரசுப் பள்ளி மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டம், மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி பிருந்தா 200/200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ரோகித் 198/200 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடம் பிடித்துள்ளார். வேலூர் மாவட்டம் பொன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அனிதா 198/200 மதிப்பெண்களுடன் 3-வது இடத்தையும் கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜோதிஶ்ரீ 198/200 மதிப்பெண்களுடன் 4-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
இதே போல், கோவை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தாரணி 198/200 மதிப்பெண்களுடன் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.