< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
குரோம்பேட்டையில் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் பட்டதாரி பலி
|20 April 2023 12:50 PM IST
குரோம்பேட்டையில் ரெயிலில் அடிபட்டு என்ஜினீயரிங் பட்டதாரி பலியானார்.
செங்கல்பட்டு மாவட்டம் மேலமையூர் எம்.ஜி.ஆர்.நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பிரெடரிக் ஸ்டீபன்(வயது 28). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், சென்னை ராமாபுரத்தில் உள்ள மருந்து நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். தன்னுடைய மனைவி உமா மற்றும் 6 மாத குழந்தையுடன் குரோம்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலை மனைவியிடம் நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு வருவதாக கூறிச் சென்ற பிரெடரிக் ஸ்டீபன், குரோம்பேட்டை ராதா நகர் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது ரெயிலில் அடிபட்டு பலியானார். இதுபற்றி தாம்பரம் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.