பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்
|இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற உள்ளது.
சென்னை,
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது. விண்ணப்பித்த 1.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வை நடத்த தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்பாடுகளை செய்துள்ளது.
சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 20 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் நடைபெறவிருந்த பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு, நீட் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்தால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற உள்ளது.
இந்த கலந்தாய்வில் 1.57 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று முதல் நவ.13-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.