< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
|8 July 2022 8:20 AM IST
பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
சென்னை,
பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது.
இந்த தரவரிசைப்பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக பொறியியல் கல்லூரி முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக் கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தற்போது வெளியிடப்பட்டுள்ள கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை பார்த்து தங்கள் கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.