< Back
மாநில செய்திகள்
கல்பாக்கம் அருகே கார் மோதி என்ஜினீயர் பலி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கல்பாக்கம் அருகே கார் மோதி என்ஜினீயர் பலி

தினத்தந்தி
|
29 Aug 2022 2:59 PM IST

கல்பாக்கம் அருகே கார் மோதி என்ஜினீயர் பலியானார்.

என்ஜினீயர்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி உதையாதி தட்டு கிராமத்தை சேர்ந்தவர் அஜித் (வயது 25), என்ஜினீயர்.

சென்னையில் உள்ள தனியார் லிப்ட் நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயனராக பணியாற்றி வந்தார். இவர் பணி நிமித்தமாக புதுப்பட்டினம் அருகே உள்ள ஒரு கடையில் லிப்ட் பழுது நீக்கிவிட்டு சென்னையில் உள்ள லிப்ட் அலுவலகத்திற்கு செல்ல கிழக்கு கடற்கரை சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பலி

வெங்கப்பாக்கம் அடுத்த ஆரம்பாக்கம் அருகே சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி செல்லும் கார் எதிர்பாராத விதமாக அஜித் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்