< Back
மாநில செய்திகள்
சோழிங்கநல்லூரில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

சோழிங்கநல்லூரில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி

தினத்தந்தி
|
16 Oct 2023 12:26 PM IST

சோழிங்கநல்லூரில் 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலியானார்.

தவறி விழுந்தார்

சோழிங்கநல்லூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் அருணாச்சலம் (வயது 26). என்ஜினீயரான அவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் இரவு 11.30 மணியளவில் நிறுவனத்தின் 5-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து கால், தொடை எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை பார்த்த அங்கு பணியில் இருந்த காவலாளி அங்கு இருந்தவர்கள் உதவியுடன் அருகில் உள்ள செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

சாவு

தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அருணாச்சலம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பணியில் இருந்த என்ஜினீயர் 5-வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எவ்வாறு இறந்தார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்