< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
மேல்மருவத்தூர் அருகே மரத்தில் கார் மோதி என்ஜினீயர் பலி
|8 March 2023 2:45 PM IST
மேல்மருவத்தூர் அருகே மரத்தில் கார் மோதியதில் என்ஜினீயர் பலியானார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஆமையாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரேம்நாத் (வயது (24). என்ஜினீயர். இவர் நேற்று மேல்மருவத்தூரில் உள்ள நண்பரை அழைத்து வருவதற்காக காரில் சென்றார். மேல்மருவத்தூர் அடுத்த வந்தவாசி சோத்துப்பாக்கம் சாலையில் செல்லும்போது கார் நிலைத்தடுமாறி புளிய மரத்தின் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இருந்தார். இது குறித்து அவரது அண்ணன் அமர்நாத் மேல்மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
மேல்மருவத்தூர் சப் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.