காஞ்சிபுரம்
கோவளம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் என்ஜினீயர் தற்கொலை
|கோவளம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
புத்தாண்டையொட்டி கடந்த 31-ந்தேதி இரவு கேளம்பாக்கம் போலீசார் கோவளம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவளம் கடற்கரையோரத்தில் ஆண் பிணம் ஒதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்ததில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் கடற்கரையோரம் ஒதுங்கி கிடந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.
போலீஸ் விசாரணையில் அவர் கோவையை சேர்ந்த ஜெகதீசன் (வயது 38) என்பதும் சிறுசேரியில் தங்கி மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ஜெகதீசனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.