காதல் தோல்வியால் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
|காதல் தோல்வியால் என்ஜினீயர் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சென்னை,
சென்னை வளசரவாக்கம் அடுத்த காரம்பாக்கம், பொன்னி நகர் பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி. இவரது மகன் தினேஷ்கண்ணா (வயது 25). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்தே பணிபுரிந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்ற தினேஷ்கண்ணா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை ஜன்னல் வழியாக பார்த்த பூங்கொடி, அதிர்ச்சி அடைந்தார். வளசரவாக்கம் போலீசார் தினேஷ்கண்ணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்தனர். தினேஷ்கண்ணா, பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், ஆனால் அந்த காதல் தோல்வி அடைந்ததால் விரக்தியில் இருந்த அவர் தற்கொலை செய்ததும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.