< Back
மாநில செய்திகள்
சேலத்தில் கடன் தொல்லையால் என்ஜினீயர் தற்கொலை
சேலம்
மாநில செய்திகள்

சேலத்தில் கடன் தொல்லையால் என்ஜினீயர் தற்கொலை

தினத்தந்தி
|
22 Feb 2023 2:02 AM IST

சேலத்தில் கடன் தொல்லையால் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சூரமங்கலம்,

என்ஜினீயர்

சேலம் பெரிய மோட்டூர் அமராவதி நகர் பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து. இவருடைய மகன் மதியழகன் (வயது 35). இவர் சேலத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

இவர் ஏலச்சீட்டு போட்டு நஷ்டம் அடைந்து விட்டார். இதன்காரணமாக இவருக்கு கடன் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்த நிலையில் மதியழகன் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து விட்டார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மதியழகனுக்கு செல்வி என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.




மேலும் செய்திகள்