< Back
மாநில செய்திகள்
புழல் அருகே நீதிபதியின் காரை அடித்து நொறுக்கிய என்ஜினீயர் கைது
சென்னை
மாநில செய்திகள்

புழல் அருகே நீதிபதியின் காரை அடித்து நொறுக்கிய என்ஜினீயர் கைது

தினத்தந்தி
|
24 Sept 2023 9:41 AM IST

புழல் அருகே நீதிபதியின் காரை அடித்து நொறுக்கிய என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் சந்திரகாச பூபதி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு கோர்ட்டு நீதிபதியாக இருந்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு சென்னை அடுத்த புழல் புத்தகரம் பத்மாவதி நகர் 5-வது தெருவில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு குடும்பத்துடன் வந்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை மதுரவாயல் செல்வதற்காக மதுரவாயல் தாம்பரம் மேம்பாலத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஒரு இளம்பெண்ணும் ஒரு வாலிபரும் வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிள் காரை உரசுவது போல சென்றது. இதனால் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை காரின் குறுக்கே நிறுத்திவிட்டு காரை அடித்து நொறுக்கினார். பின்பு நீதிபதியை தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. காரை அடித்து நொறுக்கி விட்டு அந்த வாலிபர் இளம் பெண்ணுடன் தப்பி சென்று விட்டனர். இது குறித்து சந்திரகாச பூபதி புழல் போலீசில் புகார் செய்தார்். இது சம்பந்தமாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்து காரை அடித்து நொறுக்கிய சென்னை கொளத்தூர் அம்பேத்கர் நகர் சேர்ந்த பிரகாஷ் (வயது 30) என்ற என்ஜினியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்