< Back
மாநில செய்திகள்
சென்னை நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை
மாநில செய்திகள்

சென்னை நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை

தினத்தந்தி
|
5 Jan 2024 4:59 AM IST

வெளிநாடுகளில் இருந்து ரூ.117 கோடி முறைகேடாக முதலீட்டு தொகை பெற்றதாக சென்னையை சேர்ந்த ஆர்.ஆர். குரூப் நிறுவனங்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை,

வெளிநாடுகளில் இருந்து ரூ.117 கோடி முறைகேடாக முதலீட்டு தொகை பெற்றதாக சென்னையை சேர்ந்த ஆர்.ஆர். குரூப் நிறுவனங்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் முறைகேடாக பண பரிமாற்றம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில், அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதுதொடர்பாக கடந்த மாதம் 28-ந்தேதி அன்று ஆர்.ஆர். குரூப் நிறுவனங்கள் தொடர்பான 8 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.74 லட்சம் ரொக்கப்பணம், மற்றும் ரூ.850 கோடிக்கான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்