< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
|9 Feb 2024 10:50 AM IST
தியாகராய நகர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவன நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னை,
சென்னையில் கே.கே.நகர், தியாகரய நகர், நுங்கம்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், மேற்கூறிய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியபோது, 2015 - 2017 காலகட்டத்தில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக, கட்டுமான நிறுவனங்களுடன் தொடர்புடைய 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.