< Back
மாநில செய்திகள்
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் காவல் 3-வது முறையாக நீட்டிப்பு
மாநில செய்திகள்

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் காவல் 3-வது முறையாக நீட்டிப்பு

தினத்தந்தி
|
11 Jan 2024 5:10 PM IST

வரும் 24-ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் கடந்த மாதம் 1-ந்தேதி ரூ.20 லட்சம் வாங்கிய போது அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிறையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் வரும் 24-ம் தேதி வரை நீட்டித்து திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மேலும் செய்திகள்