அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் 15 மணி நேரம் விசாரணை
|லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மதுரை,
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளராக உள்ள டாக்டர் சுரேஷ் பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2018 ஆம் தேதி வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரியாக கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் அங்கிட் திவாரி பணியில் சேர்ந்தார் கடந்த ஏப்ரல் மாதம் 2023 ஆம் ஆண்டு மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்
டாக்டர் சுரேஷ் பாபு மீதான வழக்கு அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்க ப்படுவதாக கூறியும் அதிலிருந்து அவரை காப்பாற்றுவதாக முதலில் மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார். இதற்கு டாக்டர் சம்மதிக்காததால் கடைசியில் 51 லட்சம் என பேரம் பேசி முடிக்கப்பட்டது. அதில் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாயை முதல் கட்டமாக திண்டுக்கலில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் காரில் வைத்து கொடுத்தார்.
மீதித் தொகையை நேற்று டாக்டரிடம் வாட்ஸ் அப் கால் மூலம் கேட்டபோது இது குறித்து நேற்று திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் டாக்டர் சுரேஷ் பாபு புகார் அளித்தார்.அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய இருபது லட்ச ரூபாயை டாக்டர் அமலாக்கத்துறை அதிகாரியிடம் கொடுத்தார்.
அதனைப் பெற்றுக் கொண்ட அவர் காரில் மதுரை நோக்கி வரும்போது கொடைரோடு சோதனை சாவடி அருகே லஞ்ச ஒழி போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் பணத்துடன் அவரை பிடித்து திண்டுக்கல் அஞ்சல் ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. அதேபோல், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் 15 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரி ஆஜர்படுத்தப்பட்டார்.