< Back
மாநில செய்திகள்
கவுதம சிகாமணி எம்.பி.க்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்
மாநில செய்திகள்

கவுதம சிகாமணி எம்.பி.க்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்

தினத்தந்தி
|
23 Aug 2023 9:23 PM IST

கவுதம சிகாமணி எம்.பி. உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

விழுப்புரம்,

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி. உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையின் தொடர்ச்சியாக கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்