< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு
|17 July 2023 10:55 PM IST
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.
சென்னை,
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதுமட்டுமின்றி சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 9 இடங்களில் பொன்முடிக்கு தொடர்புடைய வீடு, அலுவலகம், அவருக்கு சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை தற்போது நிறைவுபெற்றுள்ளது.
சோதனை முடிந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் காரில் புறப்பட்டுச்சென்றனர். விழுப்புரத்தில் நடைபெற்ற சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.